Screen Reader Access உள்நுழை

முகப்பு

1. தோற்றம்: (Origin)

              1966ல் இந்திய அரசால் திரு. மொரார்ஜி தேசாய் அவர்களின் தலைமையில் ‘நிர்வாக சீர்திருத்த ஆணையம்’  (Administrative Reforms Commission)  அமைக்கப்பட்டது. மேற்படி ஆணையம் இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள், மற்றும் அவைகளின் நிறுவனங்களின் தவறான  செயல்கள், முறைகேடுகளுக்கு எதிராகவும், குடிமக்களின் குறைகளை களையவும் சில அமைப்புகளை உருவாக்குவதற்கு பரிந்துரை செய்தது.

    குடிமக்களின் குறைகளை களைவதற்கும், நிர்வாக தவறுகள் குறித்து விசாரிப்பதற்கும் ‘லோக்பால்’, மற்றும் ‘லோக் ஆயுக்தா’ என்ற இரு அமைப்புகளை உருவாக்க வேண்டுமென்று 20.10.1966ல் நிர்வாக சீர்திருத்த ஆணையம் அன்றைய  பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களிடம் தனது அறிக்கையை  சமர்ப்பித்தது.

    அத்தகைய அமைப்புகள் சுதந்திரமானவையாகவும், எச்சார்பற்றவையாகவும், சாதாரண நடைமுறைகளைக் கொண்டதாகவும்,  அரசியல் சார்பற்றதாகவும்,   உயர் மட்ட நீதித்துறை அதிகாரிகளைக் கொண்டதாகவும், நிர்வாகத்தினரின்  அநீதி, ஊழல், பாரபட்ச  செயல்பாடுகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க  கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று நிர்வாக சீர்திருத்த ஆணையம்  பரிந்துரைத்தது.

    2004ல் பன்னாட்டு சபை (U.N.O) ஊழலுக்கு எதிரான பிரகடனத்தை” நிறைவேற்றியது.  இது  இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்டது.  ஊழலற்ற  (Zero Tolerance against Corruption) கொள்கையை  பின்பற்ற இந்தியா உறுதி பூண்டது.

     இந்தப்பின்னணியில், ‘லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013’ (சட்ட எண் 1/2014) நமது நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.  இச்சட்டம் 16.01.2014   முதல் நடைமுறைக்கு வந்தது.

2. தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், 2018 (சட்ட எண் 33/2018): (Tamil Nadu Lokayukta Act, 2018 (Act No.33 of 2018)

              லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013ன் பிரிவு 63ன்படி தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், 2018 தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.   13.11.2018 நாளிட்ட  அரசாணை (நிலை) எண்.153, பணியாளர் (ம) நிர்வாக சீர்திருத்த (என்.சிறப்பு) துறை மூலம் இச்சட்டம்  நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்கீழ் விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது.

3. தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தன்மை: (Status of Tamil Nadu Lokayukta)

    தமிழ்நாடு லோக் ஆயுக்தா ஒரு சுதந்திரமான,  நீதித்துறை போன்ற அமைப்பாகும்.  பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

4. தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் கட்டமைப்பு: (Composition of Lokayukta)

              லோக் ஆயுக்தா ஒரு தலைவரையும், இரண்டு நீதித்துறை உறுப்பினர்களையும், இரண்டு நீதித்துறை சாரா உறுப்பினர்களையும்

        கொண்ட அமைப்பாகும்.  தமிழ்நாடு லோக் ஆயுக்தா 21.04.2019 முதல் செயல்பட்டு வருகிறது.

                                                                                       மாண்புமிகு முனைவர் எம்.ராஜாராம்,இ.ஆ.ப.,(ஓய்வு)
                                                                                                               மாண்புமிகு பெருந்தலைவர்
                                 நீதித்துறை உறுப்பினர்கள்                                                                                              நீதித்துறை சாரா உறுப்பினர்கள்

       1.  மாண்புமிகு திரு நீதியரசர் பி.ராஜமாணிக்கம், பி.எஸ்சி.,பி.எல்.,           

                                               

5. தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் பிரிவுகள்: (Various wings of Tamil Nadu Lokayukta)

அ) நீதித்துறை பிரிவு (Judicial Wing):

      ஒரு பதிவாளரின் தலைமையின் கீழ் உள்ளது.

ஆ) நிர்வாக பிரிவு (Administrative Wing):       

  ஒரு செயலாளரின் தலைமையின் கீழ் உள்ளது.  

இ) விசாரணை பிரிவு (Inquiry Wing):

                                ஒரு இயக்குநர்/காவல் கண்காணிப்பாளர் தலைமையின்கீழ்  உள்ளது. 

6. லோக் ஆயுக்தாவில் புகார்  அளித்தல்: (Complaint to Lokayukta)

                தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டப்பிரிவு 2(1) (ஈ)ன்படி,  ஊழல் தடுப்பு சட்டம், 1988 (மத்திய சட்டம் எண் 16/2018ன்படிதிருத்தியவாறு)ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமொன்றை  புரிந்த பொது ஊழியர்களுக்கெதிரான புகார்களை தமிழ்நாடுலோக்ஆயுக்தா சட்ட விதிகள், 2018ன் விதி 22ன்படி அட்டவணை Vல் கண்ட படிவத்தில் அளிக்க வேண்டும். 

7.  யாருக்கு எதிராக  புகார்: (Complaint Against Whom)

       தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டப்பிரிவு 12ல் குறிப்பிடப்பட்டுள்ள  பொது ஊழியர்களுக்கு எதிராக புகார்களை அளிக்கலாம். 

8. யாருக்கு எதிராக  புகாரளிக்க முடியாது: (Complaint not Entertainable)

             அ) தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டப் பிரிவு 13ல் குறிப்பிட்டுள்ளவைகள் குறித்து புகார் அளிக்க முடியாது.

           ஆ) குற்றம் நடந்த நாளிலிருந்து 4 வருடங்களுக்கு  மேலான குற்றங்கள் குறித்து புகாரளிக்க முடியாது. (பிரிவு 40, தமிழ்நாடு லோக்                             ஆயுக்தா சட்டம்) 

9.  விசாரணை அமர்வு: (Sittings)

   லோக் ஆயுக்தாவின் அமர்வுகள் சென்னையில் நடைபெறும்.  தேவைப்படின்  மாண்புமிகு தலைவர் அவர்களின் உத்தரவின்பேரில் மாநிலத்தின் வேறு எந்த இடத்திலும்  நடைபெறும். 

10.  பணி நேரம் :(Working Hours)

       லோக் ஆயுக்தா அலுவலகம் அனைத்துப் பணி நாட்களிலும் பகல்  10  மணி முதல் பிற்பகல் 5.45 மணி வரை செயல்படும்.  பிற்பகல் 1.15 முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை ஆகும்.

11. கோடை விடுமுறை: (Summer Vacation)

 25.03.2021 நாளைய அரசாணை (நிலை) எண்36, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (என்-சிறப்பு) துறை படி சென்னை உயர்நீதிமன்றகோடை விடுமுறை காலம் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவிற்கும் கோடை விடுமுறை காலமாகும்.